இந்திய கடற்படை வினாடி வினா போட்டியில் பங்கேற்பதற்கான பதிவு ஆக.31 வரை நீட்டிப்பு

இந்திய கடற்படையின் பிரதிநிதித்துவப் படம்
இந்திய கடற்படையின் பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய கடற்படை வினாடி வினா போட்டியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பதற்கான பதிவு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை வினாடி வினா THINQ2024 - ல் பங்கேற்பதற்கான பதிவு தேதியை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது. நாட்டை கட்டமைக்கும் இளைஞர்களிடையே தேசபக்தி, தன்னம்பிக்கை மற்றும் நமது வளமான பாரம்பரியத்தின் மீது பெருமை ஆகியவற்றை தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட இந்திய கடற்படை வினாடி வினாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான இந்த வினாடி வினா போட்டி எதிர்கால தலைவர்களுக்கு இந்திய கடற்படையை பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் 16 இடங்களைப் பிடிக்கும் அணிகள், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும் கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமிக்கு செல்ல நிதியுதவி வழங்கப்படும். ஆசியாவின் மிகப்பெரிய கடற்படை அகாடமியில் தகுதி பெறும் அணிகள் தனித்துவமான மற்றும் வளமான அனுபவத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், இந்திய கடற்படையின் அதிநவீன பயிற்சி உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளின் அதிவேக அனுபவத்தையும் பெறும்.

இந்த தனித்துவமான வினாடி வினா போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் பங்கேற்பவர்கள் சிறந்த பரிசுகளை பெறமுடியும். அதே நேரத்தில் வெற்றியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படும். மேலும், வினாடி வினா போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் பங்கேற்பதற்கான THINQ2024 சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த தனித்துவமான வாய்ப்பை தங்கள் மாணவர்களுக்கு வழங்க ஆர்வமுள்ள பள்ளிகள் 2024, ஆகஸ்ட் 31-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.indiannavythinq.in) பதிவு செய்ய வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in