

சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகள் கடந்த ஜூன், ஜூலையில் நடத்தப்பட்டன. இதில் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 26-ம் தேதி வெளியாகின.
இந்நிலையில், 10-ம் வகுப்புக்கு ஜூலை 30-ம் தேதியும் (நாளை), 11-ம் வகுப்புக்கு ஜூலை 31-ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்த முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
துணைத் தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட தேர்வுத் துறை உதவி அலுவலகங்களுக்கு சென்று பதிவுசெய்ய வேண்டும்.
மறுமதிப்பீட்டுக்கு.. அதன்படி, 12-ம் வகுப்புக்கு இன்றும், நாளையும் (ஜூலை 29, 30) விண்ணப்பிக்க வேண்டும். 10, 11-ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 1, 2-ம் தேதிகளில் பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே பின்னர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.