3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2,530 இடங்கள் உள்ளன. இவை நடப்பு கல்வியாண்டு (2024-25) இணைய வழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 7 ஆயிரம் மாணவர்கள் வரை விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கிடையே, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டுக்கான பருவத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதை கருத்தில் கொண்டு மாணவர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /www.tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு விதிகள், விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in