இலவச பேருந்து பயண அட்டைக்கு எமிஸ் தளத்தில் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

இலவச பேருந்து பயண அட்டைக்கு எமிஸ் தளத்தில் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: பள்ளி மாணவர்கள் இலவச பேருந்து பயண அட்டைக்கு எமிஸ் வலைதளம் வழியாகவே விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித் துறையில் அனைத்துவகை பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக பேருந்து பயண அட்டை (பஸ் பாஸ்) வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு மாணவர்களின் நலன்கருதி பயண அட்டையை பெறுவதற்கு எமிஸ் வலைதளம் வழியாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் எமிஸ் தளத்துக்கு சென்று மாணவர்களுக்கு பேருந்து பயண அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த பணியை உயர் தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுநர் மற்றும் ஆய்வக உதவியாளர்களை பயன்படுத்தி உடனே செய்து முடிக்க வேண்டும். இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in