யுபிஎஸ்சி மெயின் தேர்வர்களுக்கு சென்னையில் உணவு, தங்கும் வசதியுடன் இலவச பயிற்சி: பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமி

யுபிஎஸ்சி மெயின் தேர்வர்களுக்கு சென்னையில் உணவு, தங்கும் வசதியுடன் இலவச பயிற்சி: பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமி
Updated on
1 min read

சென்னை: ஐ.ஏ.எஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடத்துடன் கூடிய பயிற்சியை சேவா பாரதியின் பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமி அளிக்கிறது.

இது குறித்த செய்திக் குறிப்பு: சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வருகிறது பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமி. ஐஏஎஸ் முத்னமை தேர்வில் பயிற்சி பெற்று, மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த நிபுணர்களைக் கொண்டு (Guiding by real time officers) நேரடியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

உணவு, உறைவிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கு தனி விடுதி வசதி உண்டு. தரமான நூலகம், படிப்பகத்துடன் செயல்பட்டு வரும் இந்த அகாடமியில் இணைந்து பயிற்சி பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 10. மேலும் விவரங்களுக்கு 9003242208 / 9884472208 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in