‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2023' விருது: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2023' விருது: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
Updated on
1 min read

சென்னை: மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை -அன்பாசிரியர் 2023' விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற விண்ணப்பிக்க நாளை (ஜூன் 25) கடைசி நாளாகும்.

இந்த விருதை டெட்டால் பநேகாஸ்வஸ்த் இந்தியா இணைந்து வழங்குகிறது. லெட்சுமி செராமிக்ஸ், வர்த்தமானன் பதிப்பகம், பொன்வண்டு டிடர்ஜெண்ட் நிறுவனம் ஆகியவை நிகழ்வின் பங்குதாரராக இணைந்துள்ளன.

அன்பாசிரியர் விருத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் சுயவிவரக் குறிப்புகளுடன், ஆசிரியரின் நன்முயற்சிகளால் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கான ஆதாரங்களையும் இணைத்துப் பதிவு செய்துகொள்ளுங்கள்.

இணைய வழியில் விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் https://www.htamil.org/AA2023 என்னும் இணைய முகவரியில் விண்ணப் பிக்கலாம். இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு மு.முருகேசனை 7401329364 என்ற செல்போன் எண் அல்லது murugesan.m@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

இணையம் வழியே அனுப்ப முடியாதவர்கள், விண்ணப்பப் படிவத்தை https://www.htamil.org/AAFORM என்ற லிங்க் மூலம் டவுன்லோட் செய்து, ‘அன்பாசிரியர் விருதுக் குழு, இந்து தமிழ் திசை, 124, வாலாஜா சாலை, சென்னை -600 002’ என்ற முகவரிக்கு நாளைக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in