அரசு உதவிபெறும் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம்: தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய குழு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்துவது குறித்து ஏற்கெனவே உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. தற்போது சம்பந்தப்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்வது குறித்தும், தயார் நிலை குறித்தபுகைப்படங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் மேலும் சில வழிகாட்டுதல்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.

அதன்படி மாவட்டக் கல்விஅலுவலர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வட்டாரக் கல்விஅலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.

புகைப்படம் எடுத்து பதிவேற்றம்: இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். சிற்றுண்டி தயாரிக்கும் அறையின் முன்புறம், உட்புறம், மின்சார வசதி, குடிநீர் வசதி, பொருட்கள் வைப்பறை ஆகியவற்றின் தயார் நிலை, தட்டு, டம்ளர், அமருவதற்கான பாய்,எரிவாயு இணைப்பு, பாத்திரங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களை எடுத்து எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in