அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் 5,842 பேருக்கு மாற்றுப்பணி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 5,545இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 297 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் (மொத்தம் 5,842) உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அரக மானியம் விரயமாவதாகவும், அதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் மாணவர்கள் நலன் கருதியும், உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதிஇழப்பை தவிர்த்திடும் பொருட்டும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்யவும், மாற்றுப்பணி வழங்கவும் உரிய ஆணை வழங்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டார்.

அவரின் கருத்துருவை கவனமாக அரசு பரிசீலித்து அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2023-2024-ம் ஆண்டுக்கான பணியாளர் நிர்ணயத்தின்படி, உபரியாக பணிபுரிந்துவரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல், மாற்றுப்பணி வழங்க அனுமதித்து ஆணையிடுகிறது.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in