Published : 23 May 2024 08:12 PM
Last Updated : 23 May 2024 08:12 PM

தொழிலாளர் மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்: +2 முடிததோருக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக அரசு கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சென்னை அம்பத்தூர் மங்களபுரத்தில் (அரசு ஐடிஐ பின்புறம்) இயங்கி வருகிறது. இங்கு பிஏ (தொழிலாளர் மேலாண்மை), எம்ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுகலை டிப்ளமோ (பிஜிடிஎல்ஏ), படிப்பும் தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாகவியல் டிப்ளமோ படிப்பும் (டிஎல்எல்) வழங்கப்படுகின்றன.

முதுகலை டிப்ளமோ படிப்பு மாலை நேர படிப்பாகும். டிப்ளமோ படிப்பு வார இறுதி படிப்பாக நடத்தப்படுகிறது. 2024-2025-ம் கல்வி ஆண்டில் பிஏ (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.100. விண்ணப்பத்துடன் சாதி சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை தபால் வழியாக பெற, விண்ணப்ப கட்டணத்துக்கான டிமான்ட் டிராப்டை ‘The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai’ கோரிக்கை கடிதத்துடன் பதிவு தபால், விரைவு அஞ்சல் அல்லது கூரியர் வாயிலாக அனுப்ப வேண்டும். பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். கூடுதல் விவரங்கள் அறிய தொழிலாளர் கல்வி நிலைய ஒருங்கிணைப்பாளரான இணை பேராசிரியர் ஆர்.ரமேஷ்குமாரை 98841-59410 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x