

சென்னை: பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சி ஆன்லைன் வழியாக நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 19) மதியம் நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி 12-வது தொடர் நிகழ்வில் ‘விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் & ஃபிலிம் டெக்னாலஜி படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் பேசியதாவது:
சென்னை ஆவிச்சி காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் & சயின்ஸ் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி.அபிநயா: விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பானது 12 முதல் 15 திறன்களை உள்ளடக்கிய படிப்பாகும். ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வொரு நிறுவனங்களுக் ஏற்ப இன்டென்ஷிப் எனப்படும் ஆன்ஷாப் பயிற்சி இருக்கும்.
தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் அகாடமிக் இன்சார்ஜ் பேராசிரியர் ஜெ.சுரேஷ்: ஒரு படைப்பாளியாக விளங்க வேண்டும் என்று எண்ணுவோரும், தான் இல்லாதபோதும், தன் படைப்புகள் காலம்கடந்தும் நிலைத்திருக்க விரும்புவோரும் ஊடகத் துறையில்தான் சேர வேண்டும்.
நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: பொழுதுபோக்கு அம்சங்களோடு விளங்கிய விஷுவல் துறை, தற்போது கல்வி,தொழில், விளையாட்டு, பொது அறிவு என விரியத் தொடங்கி, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.htamil.org/UUKE12 என்ற லிங்க்-ல் பார்த்து பயனடையலாம்.