Published : 23 May 2024 06:10 AM
Last Updated : 23 May 2024 06:10 AM

கிண்டி அரசு மகளிர் ஐடிஐ-யில் உதவி தொகையுடன் தொழிற்பயிற்சி

சென்னை: கிண்டி அரசு மகளிர் ஐடிஐ-யில் கட்டிடக்கலை படவரைவாளர், தகவல் தொழில்நுட்பம், மின்னனு சாதனங்கள் பராமரிப்பு, தையல் தொழில்நுட்பம், அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம், நவீன ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் 2024-2025-ம் கல்வி ஆண்டில் சேர மாணவிகளிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயிற்சிகளில், 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் சேரலாம். வயது வரம்பு கிடையாது.

பயிற்சி காலத்தில் மாதம் ரூ.750 வழங்கப்படும். மேலும், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்த மாணவிகளுக்கு கூடுதலாக மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும். ஷு, பஸ் பாஸ் ஆகியவையும் கிடைக்கும்.

பயிற்சியின்போது தொழிற்சாலையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் மற்றும் இன்-பிளான்ட் பயிற்சி அளிக்கப்படுவதுடன் பயிற்சி முடிந்ததும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜுன் 7-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x