ஆர்.கே.நகர் அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ஆர்.கே. நகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2024-2025-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

இந்நிலையத்தில் பிட்டர், மோட்டார் மெக்கானிக், எலெக்ட்ரிசியன், வயர்மேன், வெல்டர் ஆகிய தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் சேரலாம். www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜுன் 7-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இங்கு சேருவோருக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கூடுதலாக மாதம் ரூ.1000 கொடுக்கப்படும். மேலும், இலவச சைக்கிள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் ஆகியவையும் உண்டு. பயிற்சியில் சேர பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.

பயிற்சியை முடித்தவுடன் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9962452989, 9094370262 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in