‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ | எலெக்ட்ரானிக்ஸ் என்றைக்கும் வேலைவாய்ப்புள்ள எவர்கிரீன் படிப்பாகும்: வல்லுநர்கள் தகவல்

‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ | எலெக்ட்ரானிக்ஸ் என்றைக்கும் வேலைவாய்ப்புள்ள எவர்கிரீன் படிப்பாகும்: வல்லுநர்கள் தகவல்
Updated on
1 min read

சென்னை: எலெக்ட்ரானிக்ஸ் துறைசார் படிப்புகள் என்றைக்கும் வேலைவாய்ப்புள்ள எவர்கிரீன் படிப்பாகும் என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்துதமிழ் திசை - உயர்வுக்கு உயர் கல்வி’ என்ற நிகழ்ச்சி ஆன்லைன் வழி நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் காலேஜ், சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியன இணைந்து வழங்கின.

கடந்த சனிக்கிழமையன்று (மே 11) நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி 8-வது தொடர் நிகழ்வில் ‘எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் அண்ட் அலைடு ஸ்டிரீம்ஸ் துறையிலுள்ள வாய்ப்புகள்’ தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் உரையாற்றினர். அப்போது அவர்கள் கூறியதாவது:

விஐடி சென்னை ஸ்கூல் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் டாக்டர் ஏ.சிவசுப்ரமணியன்: எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்
பென்பது நாம் பயன்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைத் தயாரித்தல், அதன் பயன்பாடுகளைப் பற்றியது. இதனைப் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் என்றும் அதிகமாகவே இருக்கும் எவர்கிரீன் படிப்பு எனில் மிகையில்லை.

பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன விமானப் பிரிவின் முதன்மை மேலாளர் கே.செல்வி: எலெக்ட்ரானிக்ஸ் என்பது அடிப்படையான இன்ஜினீயரிங் பிரிவாகும். மற்றசார்பு பிரிவுகள் இதிலிருந்து உருவாக்கப்பட்டன. நம் வாழ்வியலுக்கு அடிப்படைத் தேவையாக எலெக்ட்ரானிக்ஸ் கருவிகள் உள்
ளன. அன்றாட வேலைகளை எளிதாக்கும் இக்கருவிகளின் தேவைகூடிக்கொண்டே இருக்கிறது.

நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: அலுவலகங்கள், மருத்துவமனைகள், ராணுவ முகாம்கள், காவல் நிலையங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்விலும் இன்றைக்கு மின்னணு சாதனங்களின் பயன்பாடு தவிர்க்க முடியாதது. அவற்றில் வேலைவாய்ப்புகளும் அதிகமாகியுள்ளன.

இத்துறையிலுள்ள பல்வேறு படிப்புகளை அறிந்து, அதில் சேர்ந்து படிப்பது நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள உதவும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.htamil.org/UUKE08 என்ற லிங்க்கில் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in