

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 46 உயர்நிலை மற்றும் 35 மேல்நிலை பள்ளிகள் உள்ளிட்ட 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2023-24 கல்வியாண் டில் 87.13 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இது முந்தைய கல்வியாண் டைவிட 0.27 சதவீதம் அதிகமாகும்.
அதேபோல், 10-ம் வகுப்பு தேர்வில் 79.11 சதவீதம் மாண வர்கள் தேர்ச்சி பெற்றனர். இதுமுந்தைய ஆண்டைவிட 0.49 சதவீதம் குறைவு. பிளஸ் 2 தேர்வில் மாநில தேர்ச்சி விகிதத்தைவிட 7.43 சதவீதம், 10-ம் வகுப்பு தேர்வில் 12 சதவீதம் குறைவாகவே சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா ஹரி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற தலைமையாசிரியர்கள், பல இடங்களில் மாணவர்களின் பெற்றோர் போதியஆதரவு அளிப்பதில்லை. வீட்டுப்பாடங்களை முடிக்க பெற்றோர் உதவுவதில்லை. சில பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பு வதில்லை. சில ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும்போது, ஆசிரியர்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்படுகிறது என தெரிவித்தனர்.
துணை ஆணையர் எச்சரிக்கை: பின்னர், வரும் காலங்களில் தேர்ச்சி விகிதம் குறைந்தால், அதற்கு ஆசிரியர்களின் கவனக் குறைவு காரணமாக இருந்தால், தொடர்புடைய ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் பணி யிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என துணை ஆணையர் எச்சரித் ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்ச்சி விகிதத்தை உயர்த்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சீருடை, விளையாட்டில் பங்கேற் போருக்கு டி-ஷர்ட், சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.45 ஆயிரம் வரைகல்வி உதவித்தொகை உள்ளிட்ட ஏராளமான வசதிகளை வழங்குகிறோம். பிற மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இந்த வசதி கிடைப்பதில்லை.
தற்போது ஓரிரு பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்களை, துணைத் தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெறவைக்க சிறப்பு வகுப்புகளை தொடங்கி இருக்கிறோம். காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வு மதிப்பெண்களை சேகரித்து, மாணவர்கள் குறைந்த மதிப் பெண் பெற்றதற்கு காரணம் மாணவரா, ஆசிரியரா என ஆய்வு செய்துவருகிறோம். 10, 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் மருத்துவ விடுப் பெடுத்தால் தற்காலிக ஆசிரியரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
போதை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்களை கண்ட றிந்து, மனநல ஆலோசனை வழங்க திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.