

சென்னை: அதிக வேலைவாய்ப்புள்ள படிப்புகளில் சேரவே மாணவர்கள் விரும்புகின்றனர் என்று விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்வில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ஆர்.மோகன் ராஜ்பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்துதமிழ் திசை - உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற நிகழ்ச்சியை ஆன்லைன் வழி நடைபெற்றது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் காலேஜ், சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியன இணைந்து வழங்கின.
கோபால் கிருஷ்ண ராஜூகடந்த சனிக்கிழமை (மே 4) மதியம் நடைபெற்ற ஆன்லைன் வழிகாட்டி 5-வது தொடர் நிகழ்வில் ‘காமர்ஸ், சார்ட்டட் அக்கவுண்டன்ஸி & பிசினஸ் மேனேஜ்மென்ட் துறையிலுள்ள வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் துறைசார் வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:
ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஆர்.மோகன்ராஜ்: பி.காம்., மற்றும் பிபிஏ படித்தமாணவர்களுக்கு, படித்து முடித்தபிறகு நம் நாட்டுக்காக சேவையாற்றக் கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது. இந்தப் படிப்புகளைப் படிக்கிற மாணவர்கள் தொழில்முனைவோராக மாறும் வகையில் அவர்களுக்கான பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது இன்னொரு சிறப்புக்குரியது.
வி.டில்லிபாபுசார்ட்டட் அக்கவுண்டன்ட் டாக்டர் கோபால் கிருஷ்ண ராஜூ: ஒரு மனிதனுக்கு முதுகுத்தண்டைப் போல பொருளாதாரமும் மிகவும் அவசியமான ஒன்று. அப்படியான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு உந்துதலைப் போன்றவர்கள் பட்டயக் கணக்காளர்கள். எனக்கு லாபமேயில்லை என்று சொல்லும் இடத்திலும்கூட பட்டயக்கணக்காளரின் தேவை இருக்கிறது.
நிகழ்வை ஒருங்கிணைத்த ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: இந்தியாவில் பட்டப்படிப்பு படிக்கிற 100 பேரில் 13 பேர் பி.காம்., படிப்பை படிக்கிறார்கள். மத்திய அரசு வெளியிட்டுள்ள 2022-ம் ஆண்டின் புள்ளி விவரப்படி 44 லட்சம் பேர் பி.காம்., படிப்பில் இணைந்திருக்கிறார்கள். தொழில்முறை படிப்புகளுக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்புள்ள படிப்பாகப் பார்க்கப்படுவது பி.காம்., படிப்பாகும்.
இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.htamil.org/UUKE05 என்ற லிங்க்கில் அல்லது இத்துடன் உள்ள ‘க்யூஆர்’ கோடை ஸ்கேன் செய்தும் பார்க்கலாம்.இவ்வாறு அவர்கள் பேசினர்.