

சென்னை: கடல்சார் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 10-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை உத்தண்டியில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளது. மத்திய அரசின் பல்கலைக் கழகமான இங்கு பி.டெக். மரைன் இன்ஜினீயரிங், நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஷிப் பில்டிங், ஓஷன் இன்ஜினீயரிங், பிபி ஏலாஜிஸ்டிக்ஸ் மற்றும் இ-காமர்ஸ், மேரிடைம் லாஜிஸ்டிக்ஸ், பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ் ஆகிய இளங்கலை பட்டப் படிப்புகள் உள்ளன. இங்கு 2024-25 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 5-ம்தேதி ( நேற்று ) வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. கடல்சார் படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் இணையதளம் ( www.imu.edu.in ) மூலம் மே 10-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.