நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்படஇளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும்நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2024-25-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ்,ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 9-ல் தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதற்கு நாடு முழுவதும் சுமார்23 லட்சம் பேர் வரை விண் ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் தேர்வு எழுத வுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 / 6922 7700 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது neet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in