

சென்னை: உயர்கல்வி நிறுவனங்கள் (HEIs) மாணவர்களை எதிர்கால வாழ்க்கை மேம்பாட்டுக்குத் தயார்படுத்த வேண்டும், பணியிடத் தேவைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், நிலையான பதவிக் காலத்துக்காக அவர்களை உருவாக்கக் கூடாது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் துணைத் தலைவர் அபய் ஜெரே கூறினார்.
சாஸ்த்ரா பல்கலைக்கழக தினத்தில் பேசிய அவர், ``வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் நிச்சயமற்ற தன்மை மட்டுமல்லாமல், சுய வாழ்வாதாரத்துக்கு அவசியமான தொடர்ச்சியான கற்றலின்முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மக்கள் சுதந்திரமாக அல்லது பகுதி நேர ஊழியர்களாக வேலை செய்யும் ஒரு பொருளாதார அமைப்பு, அதிவேக தொழில்நுட்பங்கள் சமநிலையை மாற்றிஅமைக்கின்றன. அனைத்து வகையான கற்பித்தல்-கற்றல்களையும் ஒருங்கிணைக்கும் எதிர்கால மாதிரிகளுக்கு இடமளிக்க உயர் கல்விநிறுவனங்கள் தங்கள் எதிர்காலத் திட்டங்களை உருவாக்க வேண் டும்'' என்று வலியுறுத்தினார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகளையும், ஆசிரியர்களுக்குபிஎச்டிக்கான ஆராய்ச்சி விருதுகளையும் வழங்கினார். மேலும்அனைவரையும் கவரக்கூடியமறுசீரமைப்பு, கற்பவர்களுக்குஉகந்த உள்கட்டமைப்புக்கான முதலீட்டுடன் புதுமை படைக்கும் சாஸ்த்ராவை பாராட்டினார்.
2023-24 ஆண்டுக்கான ஆண்டறிக்கையை துணைவேந்தர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம் வாசித்தார். 1,100-க்கும் மேற்பட்டஆராய்ச்சி கட்டுரைகள், 12 காப்புரிமைகள், 8 தயாரிப்பு வெளியீடுகள், 1,900 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உட்பட பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். ஆராய்ச்சி மற்றும் பயிற்சி திட்டங்களில் ரூ.100 கோடி புதிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். l