

சென்னை: சென்னை ஐஐடி, ரோட்டரி அமைப்புடன் இணைந்து அரசுமற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 1000 பேருக்கு இணைய பாதுகாப்பு பயிற்சி அளிக்கிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்கும் வகையில் அவர்களுக்கு இணைய பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) பயிற்சி அளிக்க சென்னைஐஐடி பிரவார்டாக் டெக்னாலஜிஸ்ஃபவுண்டேஷனும், சென்னைமாவட்ட ரோட்டரி அமைப்பும் முடிவுசெய்தன.
அதன்படி,பிஐஎஸ்எஸ்டி அகாடமியுடன் இணைந்து 1000மாணவர்களுக்கு (அரசு /தனியார் பள்ளி) இணைய பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு குழுவுக்கு 100 பேர் வீதம்10 குழுக்களாக ஆயிரம் பேருக்குபயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு முதல் குழுவுக்கான பயிற்சிதற்போது தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ஐஐடி பிரவார்டாக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் துணை தலைவர் ராஜேந்திர மூத்தாகூறும்போது, ‘‘இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். இப்பயிற்சியில் இணைய பாதுகாப்பு குறித்தஅடிப்படை விஷயங்கள் சொல்லிக்கொடுக்கப்படும். இதில், கலந்துரையாடல், பயிலரங்கம், துறை நிபுணர்களுடன் நேரடி, செய்முறை பயிற்சி இடம்பெறும்’’ என்றார்.