வெளிநாட்டு மாணவர்களுக்கு கூடுதலாக 25% இடங்கள் ஒதுக்கீடு: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: வெளி நாட்டு மாணவர்களுக்கு கூடுதலாக 25% சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களை வழங்குமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுமம் ( யுஜிசி ) அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச மயமாக்குதல்: தேசிய கல்விக் கொள்கையானது இந்தியாவின் உயர்கல்வி முறைக்கு ஒரு புதிய பார்வையை வழங்கி வருகிறது. அதன் படி உயர்கல் வியை சர்வதேச மயமாக்குவது என்பது அதன் இன்றியமையாத அம்சங்களில் ஒன்றாகும். இது உயர் கல்வியில் சர்வதேச கலாச்சார பரிமாணத்தை ஒருங்கிணைப்பதுடன், சர்வதேச மாணவர்களையும், கல்வியாளர்களை யும் ஈர்ப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.

இதையொட்டி இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் சர்வதேச மயமாக்கலை எளிதாக்கும் வகையில் இளநிலை, முதுநிலை பாடத் திட்டங்களில் சர்வதேச மாணவர்களுக் கான சேர்க்கை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் கடந்த 2022 செப்டம்பர் மாதம் யுஜிசியால் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டன.

வழிகாட்டுதல்கள்: அதன்படி உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை,முதுநிலை பாடத்திட்டங்களில் அனுமதிக்கப்பட்ட மொத்த சேர்க்கைக்கு மேலாக சர்வதேச மாணவர்களுக்காக 25% சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களை கல்வி நிறுவனங்கள் உருவாக்கலாம். உள் கட்டமைப்பு, ஆசிரியர்கள் மற்றும் பிற தேவைகளைக் கருத்தில் கொண்டு ஒழுங்கு முறை அமைப்புகளால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி இந்த இடங்கள் தொடர்பான முடிவை சம்பந்தப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். இதனை நடைமுறைப் படுத்துவதன் மூலம் சர்வதேச மாணவர்களை இந்திய உயர் கல்வி நிறுவனங் களுக்கு ஈர்ப்பதுடன், இந்தியாவை சர்வதேச மாணவர் களுக்கு விருப்பமான இடமாக மாற்றுவதற்கான சாதகமான சூழலை உருவாக்க முடியும்.

இணையத்தில் பதிவேற்றம்: எனவே அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் சர்வதேச மாணவர்களின் சேர்க்கை தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள வழிகாட்டுதல்களை செயல்படுத்தவும், சர்வதேச மாணவர்களுக் கான சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களை வழங்கவும் அறிவுறுத்தப் படுகின்றன. யுஜிசியின் வழிகாட்டுதல்களின் http://uamp.ugc.ac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in