பிளஸ் 2 கல்வித் தகுதி கொண்ட குரூப்-சி பணிகளுக்கு ஜூன், ஜூலையில் தேர்வு

பிளஸ் 2 கல்வித் தகுதி கொண்ட குரூப்-சி பணிகளுக்கு ஜூன், ஜூலையில் தேர்வு
Updated on
1 min read

சென்னை: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பிளஸ் 2 கல்வித் தகுதி கொண்ட குரூப்-சி பணிகளுக்கான போட்டித் தேர்வு ஜூன் மற்றும் ஜூலையில் நடத்தப்படும் என பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி (பிளஸ் 2) நிலையிலான பணியாளர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின்பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் உள்ளிட்ட குரூப்-சி பிரிவு பணிகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வு மையம், ஆன்லைன் விண்ணப்ப முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் www.ssc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள் மே 7-ம் தேதி. தமிழ்நாடுஉள்ளிட்ட தென்மண்டலத்தில் கணினி வழி தேர்வு ஜூன், ஜூலை மாதத்தில் 21 மையங்களில் நடக்கிறது. இந்த தகவல்களை பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் கே.நாகராஜா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in