அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்களை இடமாற்றம் செய்ய உத்தரவு

அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்களை இடமாற்றம் செய்ய உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி அலுவலகங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளின் வளாகங்களில் முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் உள்ள கல்வி அலுவலகங்களை உடனடியாக வேறு வாடகை கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

அதற்கு பொதுப்பணித் துறை அறிவுறுத்தும் வாடகையை நிர்ணயம் செய்து உரிய கருத்துருவை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று துறையின் செயலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கல்வி அலுவலகங்களை பொதுப்பணித் துறையால் நிர்ணயிக்கும் வாடகை அடிப்படையில் இடமாற்றம் செய்துவிட்டு அதன் அறிக்கையை உடனடியாக இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்ந்து 2024-25-ம் கல்வியாண்டு முதல் கல்வி அலுவலகங்கள் பள்ளி வளாகங்களில் செயல்படக் கூடாது. இதை முறையாக பின்பற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in