Published : 31 Mar 2024 05:46 AM
Last Updated : 31 Mar 2024 05:46 AM

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் பிழைகள்: கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை

சென்னை: பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாளில் பிழையான 3 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஆங்கில பாட ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளின் முதல் பிரிவான ஒரு மதிப்பெண் பகுதியில் 11-வதுகேள்வியில் ‘Watch’ எனும் வார்த்தை எந்த வார்த்தையோடு இணைந்து வரும்? (Compund Word) என்று கேட்கப்பட்டு இருந் தது.

இதற்குப் பதிலாக house, manஉட்பட வாய்ப்புகள் வழங்கப்பட்டி ருந்தன. இதில் Watchman எனும்வார்த்தை அதிகம் கூறப்பட்டாலும்,Watchhouse என்பதும் பயன்பாட்டில் உள்ளது. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இரு விடைகளும் சரியாக வருவதால் இந்த கேள்விக்கு பதிலளித்த மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்.

இதேபோல், இரண்டு மதிப்பெண் பிரிவில் 18-வது கேள்வியில்What was ‘Frank’ sorry for? என்பதில் ’Franz’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘Frank’ என்று கேட்கப்பட்டிருந்தது. மேலும், 8 மதிப்பெண் பகுதியில் 46-வது ‘B’ கேள்வியில் ஷேக்ஸ்பியரின் ‘The Tempest’ என்னும் நாடகத்தில் இருந்து ‘Alonso’ என்ற கதாபாத்திரம் குறித்த விவரம்கேட்கப்பட்டுள்ளது.

இந்த கதாபாத்திரம் நாடகத்தில் இருக்கும் என் றாலும் 10-ம்வகுப்பு பாடப் புத்தகத்தில் இல்லை. அதனால் இந்த கேள்விகளுக்கு பதிலளித்த மாணவர் களுக்கும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x