தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்: ஒன்றரை லட்சத்தை நெருங்குகிறது

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்: ஒன்றரை லட்சத்தை நெருங்குகிறது
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒன்றரை லட்சத்தை நெருங்குகிறது. பொதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜுன் மாதத்தில் தொடங்கும். அதே நேரத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில் மார்ச் மாதத்திலேயே தொடங்கிவிடும்.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியது. அந்தவகையில், இந்த ஆண்டு மாணவர்சேர்க்கை மார்ச் 1-ம் தேதியே தொடங்கியது. முதல் 5 நாளிலேயே மாணவர் சேர்க்கை 34 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 995 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகபட்ச எண்ணிக்கையின்படி பார்த்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12,309 பேரும், சேலம் மாவட்டத்தில் 11,595 பேரும் சேர்க்கை பெற்றுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் வழங்கப்படும் 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டையும் பொதுமக்களிடையே எடுத்துச்சொல்லி மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in