அரசு பள்ளிகளில் மின்னணு வகுப்பறைகளுக்கு சென்னை துறைமுகம் ரூ.16 லட்சம் நிதியுதவி

அரசு பள்ளிகளில் மின்னணு வகுப்பறைகளுக்கு சென்னை துறைமுகம் ரூ.16 லட்சம் நிதியுதவி
Updated on
1 min read

சென்னை: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கமற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 30 மின்னணு (டிஜிட்டல்) வகுப்பறைகளை ஏற்படுத்த சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் தனது சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ.15.94 லட்சம் நிதியுதவிவழங்கி உள்ளது.

இதுதொடர்பாக, சென்னை துறைமுகம் மற்றும் பம்ப்ளப் அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மேலும், இந்த மின்னணு வகுப்பறையில் பயன்படுத்துவதற்காக 20 பள்ளிகளுக்கு எல்இடி தொலைக்காட்சி வழங்கப்பட்டது.

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் இந்த தொலைக்காட்சிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துறைமுகத்தின் துணைத் தலைவர் விஸ்வநாதன், பம்ப்ளப் அறக்கட்டளையின் நிறுவனர் பிரேம் குமார் கோகுலதாசன் மற்றும் துறைமுக ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in