

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
பொதுத்தேர்வு முடிந்தபின் பிளஸ்-2 மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் மார்ச் 25 முதல் மே 2-ம் தேதி வரை நீட் தேர்வுக்கு தொடர் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி மையங்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.