பொதுத் தேர்வு பணியை கண்காணிக்க மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம்: பள்ளிக்கல்வி துறை அரசாணை

பொதுத் தேர்வு பணியை கண்காணிக்க மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம்: பள்ளிக்கல்வி துறை அரசாணை
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் திருச்சியில் நாளை (பிப்ரவரி 6) ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில், துறை இயக்குநர்கள், முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தேர்வு துறை உதவி இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், பொதுத் தேர்வு பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக பொறுப்பு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வி துறை செயலர் ஜெ.குமரகுருபரன் அரசாணை பிறப்பித்துள்ளார்.

சென்னை மாவட்டத்துக்கு ஆசிரியர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கட பிரியா, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர்ஆர்த்தி, திருவள்ளூர் மாவட்டத்துக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, வேலூர் மாவட்டத்துக்கு தொடக்க கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், நாகை மாவட்டத்துக்கு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் எம்.பழனிசாமி, மதுரை மாவட்டத்துக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் என 38மாவட்டங்களுக்கும் பொறுப்புஅதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in