அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்தி பயிற்சி: வேளாண் பல்கலை. அழைப்பு

அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்தி பயிற்சி: வேளாண் பல்கலை. அழைப்பு

Published on

சென்னை: சென்னையில் நடைபெறும் அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்தி செய்வதற்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் பிப்.2-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்தி செய்வதற்கான பயிற்சி செயல்முறை விளக்கத்துடன் அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் இயற்கை வேளாண்மையின் கொள்கைகள், மண் வள மேலாண்மை, இயற்கை முறையில்ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்ககதரச் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்டவை குறித்து துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துரையாடுகின்றனர்.

இதனை விவசாயிகள், மகளிர், சுயஉதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தங்களை முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in