

பயனற்ற காகிதங்களைக் கொண்டு, குடியரசு தின பரிசுப் பொருட்களை புதுச்சேரிஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியின் கலைக்கூடத்தில் மாண வர்கள் உருவாக்கியுள்ளனர்.
புதுச்சேரியில் இந்தாண்டு முதல் சிபிஎஸ்சி பாடத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இப் பாடத்திட்டத்தில் கல்வியுடன் மாணவர்களுக்கு விளையாட்டு, கலை, கைவினைப் பொருட்கள் உருவாக்கம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குமாறு மத் திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதன்படி புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கைவினை பயிற்சிக்கான முன் னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஏற்கெ னவே நியமிக்கப்பட்டுள்ள நுண் கலை ஆசிரியர்கள், பயனற்ற பொருட்களைக் கொண்டு கலைநயமிக்க பொருட்களை எப்படிஉருவாக்குவது என்ற மாணவர் களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலியார்பேட்டையில் உள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கலைக்கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பயனற்றகாகிதங்களைக் கொண்டு கலைச் சிற்பம் உருவாக்கப்படுகிறது. நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணன் வழிகாட்டுதலில் மாணவர்கள் இப்பயிற்சியை எடுத்து வருகின் றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவர்கள், பயனற்ற காகிதங் களைக் கொண்டு சிலைகளை உருவாக்கி, அதில் தேசியக் கொடியை வைத்து பரிசுப் பொருட் களை உருவாக்கி உள்ளனர். இதனை பள்ளி குடியரசு விழாவுக்கு வருவோருக்கு பரிசு பொருட்களாக வழங்க மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
“பள்ளிப் படிப்புடன் இது போன்ற கலைசார் பயிற்சிகளால் எங்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது” என்று இதில் பங்கேற்கும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.