தொடக்கப் பள்ளிகளில் 22,418 ஸ்மார்ட் வகுப்பறைகள்

தொடக்கப் பள்ளிகளில் 22,418 ஸ்மார்ட் வகுப்பறைகள்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உயர்தர ஹைடெக் கணினி ஆய்வகங்களும், ஸ்மார்ட் வகுப்பறைகளும் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலம் முழுவதும் உள்ள 22,418 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வரப்பட உள்ளன. கரும்பலகை இல்லாமல் அகன்ற டிஜிட்டல் திரையில் ஒலி-ஒளி அமைப்புடன் கூடிய கற்றல் கற்பித்தல்கள் மேற்கொள்ளவும், கற்றலில் அதிக ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்த நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும். இதுதவிர 6,992 நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.

இதற்கான ஒப்பந்த புள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக கோரப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த கணினி ஆய்வகத்தை மேற்பார்வையிடுவதற்கான பணியாளர்களும் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒருவர் வீதம் 6,992 பேர் நியமிக்கப்படுவார்கள்.

இந்த நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள இரும்பு கேட் அமைக்கப்படும். மேலும் இடைநிலை, பட்டதாரிகளுக்கு டேப்லெட்(கையடக்கக் கணினி) வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in