மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சியில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்

பி.என்.பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையம்.
பி.என்.பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையம்.
Updated on
1 min read

மேட்டூர்: மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சியில், அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ராமமூர்த்தி நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் உள்ளது. இங்கு, 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். கடந்த 1985-ம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் புதுப்பிக்கப்பட்டது. தற்போது, அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ராமமூர்த்தி நகரில் உள்ள அங்கன்வாடி மையம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதை இடித்து விட்டு புதியதாக கட்டித் தர வேண்டும் என பேரூராட்சி, பள்ளி கல்வித்துறை, சமூக நலத்துறை என அனைத்து இடங்களிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகளின் பாதுகாப்பை கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in