

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் முறையில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான அரையாண்டுத்தேர்வு மாநிலம் முழுவதும் டிசம்பர் 11 முதல் 21 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கிடையே, மிக்ஜாம் புயல் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, அரையாண்டுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டு டிசம்பர் 13 முதல் 22 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் அரையாண்டுத்தேர்வு நேற்று தொடங்கியது.