Published : 07 Dec 2023 05:20 AM
Last Updated : 07 Dec 2023 05:20 AM

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு

சென்னை: தொடர் கனமழையால் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு இன்று (டிசம்பர் 7) தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடர்கனமழை காரணமாக அனைத்துஅரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் இன்று (டிச.7) முதல்நடைபெறவிருந்த அரையாண்டுதேர்வுகால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொழிப் பாடங்களுக்குடிசம்பர்7, 8-ம் தேதிகளில் நடத்தப்படவிருந்த தேர்வுகள், டிசம்பர் 14,20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகின்றன. இதர பாடங்களுக்கான தேர்வுகள் காலஅட்டவணையில் உள்ளவாறு டிசம்பர் 11-ம் தேதிதொடங்கி நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x