

சென்னை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக ஜெ.சங்குமணி நியமிக்கப்பட்டார்.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் (டிஎம்இ) இயக்குநராக இருந்த ஆர்.சாந்தி மலர் கடந்த அக். 31-ல் ஓய்வு பெற்றார். இதையடுத்து மருத்துவர் சாந்தாராம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த மருத்துவர் ஜெ.சங்குமணியை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக நியமித்து சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அரசாணை வெளியிட்டுள்ளார்.