Published : 05 Nov 2023 04:22 AM
Last Updated : 05 Nov 2023 04:22 AM
கோவில்பட்டி: கழுகுமலை அருகே தெற்கு கழுகுமலையில் உள்ள அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடம் பழுதடைந்ததால், நூலகத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
கழுகுமலை அருகே தெற்கு கழுகுமலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 27 மாணவ, மாணவிகள் படிக்கின் றனர். 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் 4, 5-ம் வகுப்புகளுக்கு ஒரு கட்டிடமும், 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு ஒரு கட்டிடமும் உள்ளது. 4, 5-ம் வகுப்பு கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகளாகி விட்டது. அதே போல் 1 முதல் 3 -ம் வகுப்புகள் செயல்படும் கட்டிடம் கட்டி சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில், இந்த 2 கட்டிடங் களும் மிகவும் பழுதடைந்து விட்டன. மழைக் காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் ஒழுகுகிறது. இதனால் கட்டிடத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாக உள்ளது. இந்த கட்டிடத்துக்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட சாய்வு தளமும் உடைந்து விட்டது. இதனால் அருகே உள்ள நூலக கட்டிடத்துக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தற்காலிகமாக பள்ளி மாற்றப் பட்டுள்ளது. கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் வந்து சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டு சென்றுள்ளனர். விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என தெரிவித்துள்ளனர்.
சிறிய நூலக கட்டிடத்தில் 5 வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகளை ஒருங்கே அமர வைத்து பாடம் கற்பிப்பதில் சிரமம் உள்ளது. மேலும், தற்போதுள்ள கட்டிடத்தின் முன்பு மழைக்காலங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கும். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே, பள்ளிக்கு புதிய கட்டிடம் விரைவில் கட்டி முடிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT