தமிழகத்தில் முதுநிலை மருத்துவம் படித்தபின் கட்டாய பணி ஓராண்டாக குறைப்பு

தமிழகத்தில் முதுநிலை மருத்துவம் படித்தபின் கட்டாய பணி ஓராண்டாக குறைப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மருத்துவம் படித்த பிறகு கட்டாயம் பணியாற்ற வேண்டிய ஒப்பந்த காலம்ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. அந்த ஒதுக்கீட்டின் கீழ், தமிழகத்தில் எம்டி, எம்எஸ்போன்ற முதுநிலை இடங்களைபெற்றவர்கள், தங்களது படிப்பைநிறைவு செய்த பின், 2 ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயம். இவர்களது கட்டாயபணிக்காலத்தில், மகப்பேறு விடுப்பு போன்றவை இல்லை.

இந்நிலையில், முதுநிலை மருத்துவம் படித்த மாணவர்களுக்கான ஒப்பந்த காலத்தை, 2 ஆண்டுகளுக்கு பதிலாக, ஓராண்டாக குறைத்து சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அரசாணை வெளியிட்டுள்ளார்.

அந்த அரசாணையில், “முதுநிலை மருத்துவ மாணவர்களின் ஒப்பந்த காலத்தில் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாய சேவை என்பது, தற்போதுஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்ததை மீறும்போது செலுத்த வேண்டிய அபராததொகை ரூ.40 லட்சத்தில் இருந்துரூ.20 லட்சமாக குறைக்கப்படு கிறது.

முதுநிலை மருத்துவத்துக்கு பின்னர், முதுநிலை பட்டய படிப்பு நிறைவு செய்தவர்களுக்கு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி தேவையின் அடிப்படையில் ஆண்டுதோறும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தேவைப்பட்டால் 2 ஆண்டுகளுக்கு அரசு சேவையாற்றவும் வலியுறுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in