Published : 29 Oct 2023 06:18 AM
Last Updated : 29 Oct 2023 06:18 AM

வனத்துறை பணிகளுக்கான விதிகளில் வனவிலங்குகள் உயிரியல் படிப்பை சேர்க்க உத்தரவு

சென்னை: தமிழக வனத்துறையில் காலியாக இருந்த 79 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த 2010-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இதுதொடர்பான பணி விதிகளில் வனவியல் படிப்பை மட்டும் முன்னுரிமை கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்த தமிழக அரசு, வனவிலங்குகள் உயிரியல் படிப்பை நீக்கி பணி விதிகளிலும் திருத்தம் கொண்டு வந்தது. அரசின் இந்த திருத்த நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘‘உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்துக்கு முதுகலை வனவிலங்குகள் உயிரியல் படிப்பு முன்னுரிமை படிப்பாக சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த படிப்பை வனத்துறை பணிகளுக்கான முன்னுரிமை தகுதிப் பட்டியலில் இருந்து நீக்கிய அரசின் திருத்தம் என்பது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது’’ என கூறி அதை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், வனத்துறை பணி விதிகளில் வனவிலங்குகள் உயிரியல் படிப்பையும் முன்னுரிமை படிப்பாக நான்கு வாரங்களில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x