

சென்னை: சிஎஃப்ஏ இன்ஸ்டிடியூட், ‘இந்துதமிழ் திசை’ சார்பில், முதலீட்டுமேலாண்மைத் துறையில் வெற்றிகரமாக தொழில் நடத்துவது குறித்த வெப்பினார் வரும் 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 5 மணிக்கு இணையவழியில் நடைபெறுகிறது. இந்த வெப்பினார், நுண்ணறிவு, தொழில்முறைத் தொடர்புகள், தொழில்துறையின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து நடத்தப்படுகிறது.
இந்த வெப்பினாரில் முதலீட்டுத் துறையைச் சேர்ந்த முக்கியப் பேச்சாளர்களான சிஎஃப்ஏ சொசைட்டி இந்தியா இயக்குநர் மீரா சிவா, வெல்த் யாந்ரா டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் விஜயானந்த் வெங்கடராமன், ஆஃப்ஷோர் பிசினஸ், யூபி மற்றும் சிஎஃப்ஏ தலைவருமான சீதாராமன் ஐயர், சிஎஃப்ஏ சிஐபிஎம், சிஎஃப்ஏ நிறுவனத்தில் மூலதனச் சந்தைக் கொள்கை இயக்குநர் சிவானந்த் ராமச்சந்திரன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
இதில் பங்கேற்பாளர்களுக்கு ஆழமான முதலீட்டுப் பகுப்பாய்வு முதல் நெறிமுறை முடிவெடுப்பது வரையிலான ஆலோசனைகள் வழங்கப்படும். சிஎஃப்ஏ பாடத் திட்டத்தில், போர்ட்போலியோ மேலாளர், ஆராய்ச்சி ஆய்வாளர் அல்லது நிதி தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர், தங்களதுதொழிலில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.
சான்றிதழ் படிப்பு: சிஎஃப்ஏ இன்ஸ்டிடியூட் இன்வெஸ்ட்மென்ட் பவுண்டேஷனின் சான்றிதழ் படிப்பு, சந்தைப்படுத்தல், விற்பனை, திட்ட மேலாண்மை, மனிதவளம், தகவல் தொழில்நுட்பம், சட்டப்பூர்வ நிதி மற்றும் முதலீட்டுத் துறைகளில் பணிபுரிவோருக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிஎஃப்ஏ சான்றிதழ், சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை முதலீட்டு அரங்கில் நிபுணத்துவம் பெற விரும்புவோருக்கு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கும். மேலும், இன்வெஸ்ட்மென்ட் புரபஷனல்ஸ் சர்ட்டிபிகேட் ப்ரோகிராமிற்கான டேட்டா சயின்ஸ், தரவு நுட்பங்கள் மற்றும் சர்வதேச அளவிலான முதலீட்டுச் சவால்களைச் சமாளிக்கும் வகையில், இயந்திரக் கற்றல் அடிப்படைகள் பற்றிய நடைமுறை நுண்ணறிவுகளையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கும். சிஎஃப்ஏ நிறுவனம், இந்தியாவில் 23 மையங்களுடன் தனது சோதனை மைய வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது.
நிகழ்வில் பங்கேற்க... இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/CFAWEBINAR என்ற லிங்க்-ல்அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, பதிவுசெய்து கொள்ளலாம்.