நிகர்நிலை பல்கலை.க்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம்

நிகர்நிலை பல்கலை.க்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம்
Updated on
1 min read

சென்னை: நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்காக, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலர் மணீஸ் ஆர்.ஜோஷி வெளியிட்ட செய்திக்குறிப்பு: யுஜிசி ஆலோசனையின் பேரில், யுஜிசி சட்டப்பிரிவின்கீழ் தகுதியுள்ள கல்வி நிறுவனங்களை நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், 2023-ம் ஆண்டு நிபந்தனையின் அடிப்படையில் நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்காக விண்ணப்பிக்கும் வகையில் புதிய இணையதளத்தை யுஜிசி உருவாக்கியுள்ளது.

கடந்த செப்.19-ம் தேதி www.deemed.ugc.ac.in என்ற இணையதளம் யுஜிசி மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பொது மற்றும் தனித்துவமான வளாகங்களை கொண்டிருக்கும் தகுதியுள்ள கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.

எனவே, ஆர்வமுள்ள உயர்கல்வி நிறுவனங்கள், ஆதரவு அமைப்புகள் தேவையான ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு ugc.du.2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in