Published : 13 Sep 2023 04:06 AM
Last Updated : 13 Sep 2023 04:06 AM

முதுநிலை, எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு புதுச்சேரியில் கல்விக் கட்டணம் உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் முதுநிலை மருத்துவம், எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முதுநிலை பல் மருத்துவம் மற்றும் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு பழைய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் விரைவில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்டாக் மூலம் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் கல்விக் கட்டண குழு தலைவரும், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான கண்ணம்மாள் தலைமையிலான கட்டணக்குழு மூலம் தனியார் சுய நிதி கல்லூரியில் உள்ள முதுகலை மருத்துவம், முதுகலை பல் மருத்துவம், எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்சி நர்சிங் ஆகிய படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்: முதுநிலை மருத்துவப் படிப்பு: பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா ஆகிய மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் கிளினிக்கல் சார்ந்த முது நிலை மருத்துவப் படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.7.59 லட்சத்தில் இருந்து ரூ.7.95 லட்சமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.22.77 லட்சத்தில் இருந்து ரூ.23.90 லட்சமாகவும், கிளினிக்கல் சாரா முதுநிலை மருத்துவப் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ.6.22 லட்சத்தில் இருந்து ரூ.6.55 லட்சமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.12.44 லட்சத்தில் இருந்து ரூ.13.05 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

முதுநிலை பல் மருத்துவப் படிப்பு (எம்டிஎஸ்): மாஹே பல் மருத்துவ கல்லூரியில் கிளினிக்கல் சார்ந்த முதுநிலை மருத்துவப்படிப்பில்உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குரூ.6.22 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.14 லட்சம், பாரா கிளினிக்கல் சார்ந்த முதுநிலை பல்மருத்துவப் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.5.53 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.7.19 லட்சம் என பழைய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் கிளினிக்கல் சார்ந்த முதுநிலை மருத்துவ படிப் பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.6.22 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.14 லட்சமும் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ்: பிம்ஸ் மற்றும் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3.80 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு ரூ.3.29 லட்சத்தில் இருந்து ரூ.3.80 லட்சமாகவும், மூன்று தனியார் கல்லூரிகளிலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.16 லட்சத்தில் இருந்து ரூ.16.80 லட்சமாகவும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.21 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பிஎஸ்சி (நர்சிங்): புதுவையில் உள்ள மூன்று தனியார் செவிலியர் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.42 ஆயிரம் என பழைய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கூடுதல் கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து: புதுவையில் தற்போது நிர்ணயிக்கப்பட்டு புதிய கல்வி கட்டணமா னது, சேர்க்கை கட்டணம், கல்விக் கட்டணம், சிறப்பு கட்டணம், ஆய்வ கம், கணினி, பராமரிப்பு மற்றும் வசதிகள் கட்டணம் மற்றும் பிற செலவுகள் போன்ற பல்வேறு கட்டணங்கள் உட்பட அனைத்தையும் உள்ளடக்கிய ஆண்டு கட்டணமாகும்.

கட்டணக் குழுவால் நிர்ணயிக் கப்பட்ட கட்டணங்களைத் தவிர, கல்வி நிறுவனங்களுக்கு எந்த விதமான கூடுதல் கட்டணத்தையும் எந்த விதத்திலும் வசூலிக்க உரிமை இல்லை. எந்தவொரு விலகலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறுவதாகும். மேலும் புதுச்சேரி அரசு, தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகம் போன்ற உரிய அதிகாரிகளால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிமீறலுக்கான தண்டனை நடவடிக்கையானது தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதலை திரும்ப பெறுதல், பல்கலைக்கழகத்தால் அங்கீகாரத்தை ரத்து செய்தல் மற்றும் அதிக அபராதம் விதித்தல் ஆகியவைஅடங்கும் என்று கட்டணக் குழு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சார்பு செயலர் கந்தன்வெளியிட்ட உத்தரவில் குறிப்பிட் டுள்ளார். கூடுதல் கட்டணம் எந்த விதத்திலும் வசூலிக்க உரிமை இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x