டிச.3-ம் தேதி கிளாட் நுழைவு தேர்வு: மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தேசிய கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு, வரும் டிச. 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின்கீழ் இந்தியா முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில்இயங்கிவரும் இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர ‘கிளாட்’ எனும் பொது சட்ட நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எல்எல்பி மற்றும் எல்எல்எம் படிப்புகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

அதேபோல தேசிய சட்டப்பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின்அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

இந்நிலையில், 2024-25-ம் கல்விஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க இருப்பதையொட்டி, கிளாட் தேர்வு வரும் டிச.3-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளத்தில் வரும் நவ.3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.4 ஆயிரமும், எஸ்சி, எஸ்டிபிரிவினர் ரூ.3,500-ம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8047162020 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in