லிம்ரா மூலம் பிலிப்பைன்ஸ் பல்கலை.யில் மருத்துவம் படிக்கும்போதே எம்எம்ஜி தேர்வுக்கும் பயிற்சி

லிம்ரா மூலம் பிலிப்பைன்ஸ் பல்கலை.யில் மருத்துவம் படிக்கும்போதே எம்எம்ஜி தேர்வுக்கும் பயிற்சி
Updated on
1 min read

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்ற எப்எம்ஜி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், கடந்த ஜூலை 2023-ல் நடைபெற்ற எப்எம்ஜி தேர்வில் 10.6 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றனர்.

அதேசமயம் லிம்ரா நிறுவனத்தின் லைம் (LIME - Limra Institute for Medical Education) மூலம் தேர்வு எழுதிய மாணவர்களில் 76% பேர் எப்எம்ஜி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதுகுறித்து லைம் பிரிவின் இயக்குநர் முகமது கனி கூறும்போது, ``லிம்ரா நிறுவனத்தின் லைம்தேர்வு பயிற்சி நிறுவனத்தில் படித்த 76% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பல்வேறு நாடுகளில் படித்த மருத்துவ மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைப் பார்க்கையில், பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளதைக் காண முடிகிறது.

பல வெளிநாடுகளில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் 19 பாடங்களையும் வகுப்பறைகளில் நடத்துவதில்லை. சில பாடங்களை மாணவர்களாகவே சி.டி. வழியாகக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பல மாணவர்களுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனுபவம் கிட்டுவதில்லை. இதுபோன்ற காரணங்களால் மாணவர்களால் எப்எம்ஜி தேர்வில் தேர்ச்சி பெற முடிவதில்லை.

இத்தகைய மாணவ, மாணவிகளுக்கு லைம் பயிற்சி மையத்தில் 19 பாடங்களும் சிறந்த வல்லுநர்கள் மூலம் கற்பிக்கப்படுகின்றன. வாரந்தோறும் மாதிரி தேர்வுகள் வைத்து, சந்தேகங்கள் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மூலம் தீர்க்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க விரும்புபவர்கள் தேவையான தகவல்களைப் பெற லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்தை அணுகலாம். லிம்ரா மூலம் மருத்துவம் படிப்பவர்களுக்கு எப்எம்ஜி தேர்வுக்கான பயிற்சியும் அவர்கள் படிக்கும்போதே வழங்கப்படுகிறது'' என்றார். இத்தகவலை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in