ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் பெண்களுக்கு கட்டணச் சலுகையில் குருப்-1,2 பயிற்சி

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் பெண்களுக்கு கட்டணச் சலுகையில் குருப்-1,2 பயிற்சி
Updated on
1 min read

சென்னை: அண்ணாநகரில் செயல்படும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1,2 முதல்நிலைத் தேர்வு எழுதும் பெண் தேர்வர்களுக்கு கட்டணச் சலுகையுடன் 5 மாதகால பயிற்சி வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.

ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப்-1 பணிகளுக்கும், நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், துணை வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட குரூப்-2 பணிகளுக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வுகளுக்குத் தயாராகும் பெண் தேர்வர்களுக்கு முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி நடைபெறுகிறது.

நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட ஒவ்வொரு பாடத்துக்கும் தமிழ், ஆங்கிலத்தில் பாடக்குறிப்பேடுகள் வழங்கப்படும். பாடவாரியான மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடைபெறும். வெற்றியாளர்கள் மற்றும் துறை வல்லுநர்களின் தொடர் வழிகாட்டுதலில் தேர்வர்களுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் 5 மாதகாலம் நடைபெறும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் 2165, எல்.பிளாக், 12-வது பிரதானச் சாலை, அண்ணாநகர் என்ற முகவரியில் தக்க சான்றிதழ் நகல்களுடன் நேரில் வரும் 8-ம் தேதிக்குள் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9150466341, 7448814441 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in