உயர்கல்வி நிறுவன விழிப்புணர்வு: தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ‘சிறந்த வழிகள்’ நிகழ்ச்சி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 26-ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ‘சிறந்த வழிகள்’ என்ற தொடர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

இந்தத் தொடரின் மூலம், உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது வளாகம், நிறுவனத்தின் வசதிகள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தவும், துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்களுடனான நேர்காணல் உரையாடல்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுடனான கலந்துரையாடல்களை வெளிகொணரவும் முடியும். எனவே, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.30 மணிக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பைப் பார்க்க ஊக்குவிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in