பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: மே 20 முடிவுகள் வெளியீடு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் நிறைவு பெற்​றது. இதில், பிர​தான பாடங்​களுக்​கான தேர்​வு​கள் ஏப்​.2-ம் தேதி​யுடன் முடிந்த நிலை​யில், நேற்று மலை​யாளம், கன்​னடம் உள்​ளிட்ட 9 விருப்ப மொழிப் பாடங்​களுக்​கான தேர்வு நடை​பெற்​றது. இந்த தேர்வை 4 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் எழு​தினர். தேர்வு எளி​தாக இருந்​த​தாக மாணவர்​கள் தெரி​வித்​தனர்.

பொதுத் தேர்வு முடிவடைந்​ததை அடுத்​து, விடைத்​தாள் திருத்​தும் பணி ஏப்​.10 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதற்​காக தமிழகம் முழு​வதும் 80-க்​கும் மேற்​பட்ட முகாம்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இப்​பணி​களில் சுமார் 50 ஆயிரம் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். தொடர்ந்​து, மதிப்​பெண் பதிவேற்​றம் உள்​ளிட்ட பணி​களை முடித்​து, திட்​ட​மிட்​டபடி மே 20-ம் தேதி தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​படும் என்று தேர்​வுத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in