பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் சற்று கடினம்: மாணவர்கள், ஆசிரியர்கள் தகவல்

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் சற்று கடினம்: மாணவர்கள், ஆசிரியர்கள் தகவல்
Updated on
1 min read

சென்னை: பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்​வில் ஆங்​கில பாடத்​துக்​கான வினாத்​தாள் சற்று கடின​மாக இருந்​த​தாக மாணவர்​கள் தெரி​வித்​தனர்.

தமிழக பள்​ளிக் கல்வி பாடத்​திட்​டத்​தில் 10-ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. தொடர்ந்து ஆங்​கிலப் பாடத்​துக்​கான தேர்வு நேற்று நடை​பெற்​றது. இத்​தேர்வை மாநிலம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டுள்ள 4,219 மையங்​களில் 8.84 லட்​சம் மாணவர்​கள் எழு​தினர். மேலும்,11,411 மாணவர்​கள் தேர்​வில் பங்​கேற்​கவில்​லை. இந்த தேர்வு சற்று கடின​மாக இருந்​த​தாக மாணவர்​கள் தெரி​வித்​தனர்.

இதுகுறித்​து, ஆசிரியர்​கள் கூறுகை​யில், “வி​னாத்​தாளில் 1, 2 மதிப்​பெண் பகு​தி​யில் சில கேள்வி​கள் கடின​மாக இருந்​தன. இலக்கண பகு​தி​யும் சற்று கடின​மாகவே இருந்​தது. மெல்ல கற்​கும் மாணவர்​கள் தேர்ச்சி பெறு​வ​தில் பெரி​தாக சிக்​கல் இருக்​காது. எனினும், அதிக மதிப்​பெண் பெற விரும்​பிய மாணவர்​களுக்கு இந்த வினாத்​தாள் சற்று ஏமாற்​ற​மாகி​விட்​டது. சென்​டம் எண்​ணிக்​கை​யும் குறைய வாய்ப்​புள்​ளது” என்​றனர்.

தொடர்ந்து கணிதப் பாடத் தேர்வு வரும் 25-ம் தேதி நடை​பெறவுள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வு ஏப். 6-ம் தேதி​யுடன் முடிவடைய உள்​ளது. மேலும், தேர்வு முடிவு​கள் மே 20-ல் வெளி​யிடப்பட உள்​ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. தமிழகம் முழு​வதும் சுமார் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழுதுகின்​றனர். மார்ச் 26-ம் தேதி​யுடன் தேர்வு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்​து, விடைத்​தாள் திருத்​தும் பணி தொடங்க உள்​ளது.

இதுகுறித்து தேர்​வுத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: தேர்​வு​கள் முடிந்த பிறகு, மாணவர்​களின் விடைத்​தாள்​கள் மார்ச் 28-ம் தேதி மண்டல சேகரிப்பு மையங்​களுக்கு அனுப்​பப்​பட்​டு, அங்கு கலக்கி பிரிக்​கப்​படும். பின்​னர், விடைத்​தாள் திருத்​தும் பணிக்​காக தமிழகம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டுள்ள 83 முகாம்​களுக்கு ஏப்​.4-ம் தேதி கொண்டு செல்​லப்​படும்.

திருத்​துதல் பணி ஏப்​.8-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடை​பெறும். இதில் சுமார் 46 ஆயிரம் முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர்​கள் ஈடுபட உள்​ளனர். விடைத்​தாள் திருத்​தும் பணி​யின்​போது ஆசிரியர்​கள் உரிய வழி​காட்டு நெறி​முறை​களை பின்​பற்றி கவனத்​துடன் செயல்​படு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் சற்று கடினம்: மாணவர்கள், ஆசிரியர்கள் தகவல்
தவெகவில் ‘உள்ளடி’ அரசியல் தீவிரம்: வேட்பாளர்களை கண்டறிய விஜய் திணறல்?!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in