Published : 16 Aug 2023 05:58 AM
Last Updated : 16 Aug 2023 05:58 AM

கல்வி உதவிக்கான முதல்வரின் திறனாய்வு தேர்வு: இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை: முதல்வரின் திறனாய்வுத் தேர்வு குறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்காக செப்.23-ல் ‘தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு’ நடக்கிறது. இதில் 1000 மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் இளநிலை படிப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை தரப்படும். இதற்கான விண்ணப்ப விவரங்களை www.dge.tn.gov.in தளத்தில் தலைமை ஆசிரியர்கள் ஆக.25-க்குள் பதிவிட வேண்டும். கட்டணம் செலுத்திய பின் பதிவுகளைமாற்ற இயலாது என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x