Published : 16 Aug 2023 06:00 AM
Last Updated : 16 Aug 2023 06:00 AM

சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களை 10 லட்சமாக உயர்த்த திட்டம்: பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி தகவல்

சென்னை: நாட்டின் 77-வது சுதந்திர தினத்தைஒட்டி தமிழ்நாடு சாரணர் இயக்குநரகம் சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அதன் தலைமையகத்தில் சுதந்திர தின விழாநேற்று கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக்கல்வி இயக்குநரும், சாரணர் இயக்குநரகத்தின் ஆணையருமான க.அறிவொளி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில் அறிவொளி பேசும்போது, ``சாரணர் இயக்கத்தில் தற்போது 4 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்துவதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாரணர் இயக்குநரகத்தின் பராமரிப்பு பணிக்காக அரசு சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

இந்நிகழ்வில் தொடக்கக் கல்விஇயக்குநர் ச.கண்ணப்பன், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் துறைஇயக்குநர் எம்.பழனிசாமி உள்ளிட்டஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், விஐடி பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவள மண்டல தலைவர் ஷீத்தல் எச்.ரஜானி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக் கோடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து மாணவர்களின் சார்பில் தேசபக்தி குறித்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் விஐடி பல்கலை. நிறுவனர் கோ.விசுவநாதன், துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுதவிர அனைத்து அரசுக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகளுடன் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x