தாய்மொழியில் எழுதும்போது​தான் உண்மையான படைப்பாற்றல் வெளிப்படும்: இறையன்பு கருத்து

தாய்மொழியில் எழுதும்போது​தான் உண்மையான படைப்பாற்றல் வெளிப்படும்: இறையன்பு கருத்து

பள்ளி மாணவர்கள் எழுதிய 108 நூல்கள் வெளியீடு
Published on

சென்னை: தாய்​மொழி​யில் சிந்​தித்து எழுதும்​போது​தான் உண்​மை​யான படைப்​பாற்​றல் வெளிப்​படும் என்று முன்​னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளார்.

எழுதுக இயக்​கத்​தின் சார்​பில் பள்ளி மாணவர்​கள் எழு​திய 108 நூல்​கள் வெளி​யிடும் நிகழ்ச்சிசென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. விழாவுக்கு தலைமை தாங்கிய முன்​னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு நூல்​களை வெளி​யிட்டு பேசி​யது: பேனாவை கையில் எடுத்து எழுதத் தொடங்​கி​னாலே செல்​போன் பயன்​படுத்த நேரமிருக்​காது. மேலும், எழுத்து வாசிப்​பைத் தூண்​டும். வாசிப்பு மொழித்​திறனை​யும், கற்​பனை வளத்​தை​யும் பெருக்​கும். எழுது​வதன் மூலம் உற்​று​நோக்​கும் திறனும், மனிதர்​களை வாசிக்​கும் திறனும் மேம்​படும்.

அதனால் உங்​கள் கவனச்​சிதறல் முழு​வது​மாக அகன்​று​விடும். சமூக அக்​கறை கொண்டசான்​றோரை உரு​வாக்​கும். ஆங்​கிலம் மட்​டுமே அறிவல்ல. தாய்​மொழி​யில் சிந்​தித்து எழுதும்​போதுதான் உண்​மை​யான படைப்​பாற்​றல் வெளிப்​படும். அறி​வியல், கணிதம் என பல்​வேறு துறை​களி​லும் சாதிக்க முடி​யும்.

விரிவாக்கம்: படைப்​பாக்கத் திறனை உற்​சாகப்​படுத்​தும்​போது உங்​களுக்கு தன்​னம்​பிக்கை வரும். அது உங்​களை அடுத்​தகட்​டத்​துக்கு முன்​நகர்த்தி செல்​லும்.இந்த எழுதுக இயக்​கம் அரசுப்பள்​ளி​களு​டன் நின்​று​வி​டா​மல்கண்​ணகி நகர் போன்ற இதர பகு​தி​களுக்​கும், சிறைச் சாலைக்​கும் விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது.

இதன்தொடர்ச்சியாக தனியார் பள்ளி ஆசிரியருக்​கும் பயிற்சி அளிக்க திட்​ட​மிட்​டுள்​ளோம். இவ்​வியக்​கம் மாணவர்​களிடம் சமூக அக்​கறை, நேர்​மை,பொறுப்​புணர்வு ஆகிய​வற்றை வளர்க்​கும். இவற்றை தாண்டி சாதி, மதப் பாகு​பாடு இல்​லாத சமு​தா​யத்தை உரு​வாக்​கு​வதற்கு மாணவர்​கள் முன்​வர​வேண்​டும். அதற்கு இந்த எழுத்து உதவும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் பேசும்​போது,“மாணவர்​கள் வாசிப்​புப் பழக்​கத்தை வளர்த்​துக் கொள்ள வேண்​டும். செல்​போன் தவிர்த்து தின​மும் ஒரு மணி நேர​மாவது வாசிக்க வேண்​டும். மாணவர்​கள் தங்​கள் கனவை நனவாக்க உறு​தி​யுடன் உழைக்க வேண்​டும். இந்த நிகழ்வு மாணவர்​களுக்கு ஒரு உந்​துசக்​தி​யாக அமை​யும்​”என்​றார்.

இந்​நிகழ்​வில் மூத்த ஐஏஎஸ் அதி​காரி ராம் பிர​சாத் மனோகர், சிருஷ்டி செயற்கை கருத்​தரிப்பு மையத்​தின் இயக்​குநர் எம்​.எஸ்​.பிர​சாந்​தன், குரு​நானக் கல்வி அறக்​கட்​டளைச் செய​லா​ளர் முஞ்​சித் சிங் நய்​யார், இளைஞர் சக்தி அமைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர் ஜோசப் ராஜா, எழுதுக இயக்​கத்​தின் ஒருங்​கிணைப்​பாளர்​கள் வே.கிள்ளிவளவன், ம.த.சுகு​மாறன்​ உட்​பட பலர்​ பங்கேற்றனர்​.

தாய்மொழியில் எழுதும்போது​தான் உண்மையான படைப்பாற்றல் வெளிப்படும்: இறையன்பு கருத்து
மேகாலயா சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in