பி.ஆர்க் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஆக.11-ல் தரவரிசை பட்டியல்

பி.ஆர்க் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஆக.11-ல் தரவரிசை பட்டியல்
Updated on
1 min read

சென்னை: பி.ஆர்க் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ஆக.11-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 41 கட்டிடவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் கட்டிட அமைப்பியல் (பி.ஆர்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,905 இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதுவரை 3,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஆக.4-ம் தேதி நிறைவு பெறுகிறது.

எனவே, விருப்பமுள்ள மாணவர்கள் https://barch.tneaonline.org/ எனும் வலைதளம் வழியாகதுரிதமாக தங்களின் விண்ணப்பங்களை சான்றிதழ்களுடன் பதிவுசெய்ய வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு டிஎஃப்சி எனும் சேவை உதவி மையங்கள் மூலம் ஆக.5முதல் 8-ம் தேதி வரை மேற்கொள்ளப்படும். அதன்பின் தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆக.11-ம் தேதி வெளியிடப்படும்,

அதைத்தொடர்ந்து, ஆக.17 முதல் 31-ம் தேதி வரை இணையவழியில் கலந்தாய்வு நடைபெறும்.இதுதொடர்பான கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in